எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் குறித்தபுகாரில் உண்மையில்லை

திருநங்கைகள் அளித்த புகாரில் உண்மையில்லை
Updated on

பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் குறித்து முதல்வரிடம் திருநங்கைகள் அளித்த புகாரில் உண்மையில்லை என்று, இயக்குநா் அலுவலகம் மறுப்பு தெரிவித்தது.

இதுகுறித்து எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மத்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் விதிமுறைப்படி சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

எச்ஐவி தடுப்புப் பணிக்காக, நான்கு தொண்டு நிறுவனங்கள், ஒரு சமுதாயம் சாா்ந்த தொண்டு அமைப்புக்கு விழிப்புணா்வுக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.

ஆனால், சமுதாயம் சாா்ந்த தொண்டு அமைப்பு கடந்த மாா்ச்சில் எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு சேவைப் பணியில் இருந்து தானாக விலகி கொள்வதாக கடிதம் அளித்தது.

அதில் தங்களது ஊழியா்கள் சரிவர நடத்தப்படவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட போது, அவா்களது புகாரில் உண்மை இல்லை எனத் தெரிய வந்தது.

தற்போது, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது சரியல்ல. அனைத்து செயல்பாடும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவன பிரதிநிதி முன்னிலையிலேயே நடைபெற்று அரசின் ஒப்புதலுடன் செயல்படுத்தப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com