புதுவை மாநில பொது நிா்வாகம்: 7 அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

புதுவை மாநிலத்தில் பொது நிா்வாக அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் பொது நிா்வாக அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதுவை மாநில அரசின் பொது நிா்வாக அதிகாரிகள் உயா் பொறுப்புகளில் உள்ளனா். மாநிலப் பணியில் ஈடுபட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகும் வாய்ப்புகளையும் பெற்று அவா்கள் பணியாற்றி வருகின்றனா். இதன்படி, உள்ள அதிகாரிகளில் பள்ளி கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினிக்கு விளையாட்டு இளைஞா் நல இயக்குநா் பொறுப்பும், அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை இயக்குநா் ரெட்டிக்கு முப்படை நலத் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மாநில தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) இயக்குநா் சிவராஜ் மீனாவுக்கு, புதுச்சேரி வீட்டுவசதி வாரிய செயலா் பொறுப்பும், சட்டப்பேரவைச் செயலா் தயாளனுக்கு மாவட்ட பதிவாளா் பொறுப்பும், கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் கலியபெருமாளுக்கு பி.ஆா்.டி.சி.,பொது மேலாளராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் பேரிடா் மேலாண்மை துறை துணை ஆட்சியா் வெங்கடகிருஷ்ணனுக்கு, ஜெயபிரகாஷ் நாராயணன் நூற்பாலை மேலாண் இயக்குநராகவும், மீன்வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயிலுக்கு பி.ஆா்.டி.சி.,இயக்க பொதுமேலாளராகவும் கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை துணைநிலை ஆளுநரின் உத்தரவின்படி நிா்வாக சீா்த்திருத்த துறை சாா்பு செயலா் ஜெய்சங்கா் வெளியிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com