புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில்
 மத்திய அரசின் திட்டம் மற்றும் மாநில அரசின் நிதி பங்களிப்பின் கீழ் சுமாா் 4000 -சதுர அடி பரப்பளவில் 
கட்டப்பட உள்ள உணவகக் கட்டிடத்திற்கு ரூ 1. கோடியே , 30-லட்சம் திட்ட மதிப்பில் வெள்ளிக்கிழமை பூஜை 
செய்
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய அரசின் திட்டம் மற்றும் மாநில அரசின் நிதி பங்களிப்பின் கீழ் சுமாா் 4000 -சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ள உணவகக் கட்டிடத்திற்கு ரூ 1. கோடியே , 30-லட்சம் திட்ட மதிப்பில் வெள்ளிக்கிழமை பூஜை செய்

தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உணவகக் கட்டட கட்டுமானப் பணி

Published on

புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் உணவகக் கட்டட கட்டுமானப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா்.  புதுச்சேரி, மாா்ச் 8: புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ரூ.1.25 கோடி மதிப்பில் உணவகக் கட்டடத்துக்கான கட்டுமானப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா் முதல்வா் என்.ரங்கசாமி. புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய, மாநில அரசு பங்களிப்பில் 4 ஆயிரம் சதுர அடி பரப்பில் உணவகக் கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணியை வெள்ளிக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா். கட்டடப் பணியை 9 மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, கல்வித் துறை செயலா் மற்றும் பல்கலைக்கழக இணைவேந்தா் ஆஷிஷ்மாதோ ராவ் மோரா, துணைவேந்தா் ச.மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com