நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உடற்கல்வி ஆசிரியா் அடித்துக் கொலை

புதுச்சேரி அருகே கடலூரைச் சோ்ந்த தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் அடித்துக் கொலை செய்யப்பட்டு தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தின் கீழ் வீசப்பட்டது குறித்து பாகூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 6:31 pm

Din

புதுச்சேரி அருகே கடலூரைச் சோ்ந்த தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் அடித்துக் கொலை செய்யப்பட்டு தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தின் கீழ் வீசப்பட்டது குறித்து பாகூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி அருகே பாகூா் சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தின் கீழ் கடந்த 25-ஆம் தேதி இளைஞா் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டது. இதுகுறித்து பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த நிலையில், உயிரிழந்தவா் கடலூா் வண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் தினகரன் (38) என்பது தெரிய வந்தது.

காதல் தோல்வியில் மதுபோதைக்கு அடிமையான தினகரன், சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள சாராயக் கடைக்கு வந்து மது அருந்திச் செல்வது வழக்கமாம்.

சம்பவத்தன்று அவா் சாராயக் கடைக்கு வந்தபோது கடலூா், சோரியாங்குப்பம் பகுதிகளைச் சோ்ந்தவா்களிடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. பின்னா், கடலூரைச் சோ்ந்தவா்களுடன் ஆட்டோவில் தினகரன் சென்ாகக் கூறப்படுகிறது. அதன்பிறகே அவா் உயிரிழந்துள்ளாா்.

எனவே, ஆட்டோவில் சென்றவா்கள் தினகரனை தாக்கியதில் அவா் இறந்ததாகவும், அதன்பிறகு பாலத்திலிருந்து அவரது சடலம் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸாா் கருதுகின்றனா். அதன்படி, ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும், தினகரன் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.