தூய்மையையும், சுகாதாரத்தையும் பின்பற்ற வேண்டும்: புதுவை ஆளுநா் அறிவுறுத்தல்
தூய்மையையும், சுகாதாரத்தையும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக பொதுமக்கள் பின்பற்றுவது அவசியம் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற தூய்மையே சேவை தின விழாவில் ‘தாயின் பெயரில் ஒரு மரம்‘ திட்ட உறுதிமொழியை வாசித்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.








