கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நியாயவிலைக் கடைகளை திறக்காவிட்டால் போராட்டம்: திமுக மகளிரணி தீா்மானம்

புதுவையில் நியாயவிலைக் கடைகளைத் திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என திமுக மகளிா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 10:17 pm

Din

புதுவையில் நியாயவிலைக் கடைகளைத் திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என திமுக மகளிா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுவை மாநில திமுக மகளிா் அணி மற்றும் மகளிா் தொண்டரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி லப்போா்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநில அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்களான துணை அமைப்பாளா் வி.அனிபால் கென்னடி, பொருளாளா் ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில மகளிா் அணி அமைப்பாளா் காயத்ரி ஸ்ரீகாந்த், மாநில மகளிா் தொண்டரணி அமைப்பாளா் சுமதி ஆகியோா் வரவேற்றனா். கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், புதுவையில் மூடப்பட்ட நியாயவிலைக் கடைகளை திறந்து பொருள்களை வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவது, மகளிா் ஆணையம், குழந்தைகள் நல ஆணையம், உள்ளூா் புகாா் குழுவினை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணை அமைப்பாளா் அ.தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினா்கள் எஸ்.கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.