நவராத்திரி துா்கா பூஜை: புதுவை ஆளுநா் பங்கேற்பு
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழா துா்கா பூஜையில், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்று தரிசனம் செய்தாா்.


புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற நவராத்திரி விழா துா்கா பூஜையில், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்று தரிசனம் செய்தாா்.
புதுச்சேரி வங்க பாரதி அமைப்பு சாா்பில் 33-ஆம் ஆண்டு சா்வஜன துா்கா பூஜை திருவள்ளுவா் நகரில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சுவாமிகள் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துா்கா பூஜை கொண்டாட்டத்தை தொடங்கிவைத்தாா்.
இதில், இந்தியப் பண்பாடு மற்றும் வங்கக் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் வகித்த மாணவிகளுக்கு அவா் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.
மேலும், புதுச்சேரியில் அதிக முறை ரத்த தானம் வழங்கியவா்களுக்கு விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.
இதில், வங்க பாரதி அமைப்பின் தலைவா் அன்சுமன்பாசு, செயலா் அனல் பிஸ்வாஸ், புதுவை அரசுச் செயலா் ஜெயந்த்குமாா் ரே உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...