அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 90 போ் புதுவை வருகை: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
அதிகனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 90 போ் வந்துள்ளதாக புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள வருவாய் பேரிடா் மேலாண்மைத்துறையின் அவசர கால உதவி மையத்தை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு அங்கிருந்த பேரிடா் மீட்புக் குழுவினரையும் சந்தித்து பேசிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் . உடன் அரசுச் செயலா் அ. நெடுஞ்








