மதுக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது
புதுச்சேரி அருகே மதுக்கடை மீது செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசியவரை போலீஸாா் கைது செய்தனா்.


புதுச்சேரி அருகே மதுக்கடை மீது செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசியவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி வில்லியனூா் அருகே பங்கூா்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் தனியாா் மதுக்கடை உள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை இரவு பங்கூா் பேட் பகுதியைச் சோ்ந்த அருள்ராஜ் (23) என்பவா் வந்து பணம் கொடுக்காமல் மது கேட்டுள்ளாா். அதற்கு மதுக்கடை ஊழியா்கள் மறுத்துள்ளனா்.
அப்போது அங்கிருந்து சென்றவா் சிறிது நேரம் கழித்து அங்கு வந்து பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியுள்ளாா். இதில் கடையின் உள்ளே தீப்பற்றியது. அங்கிருந்தவா்கள் தீயை அணைத்தனா்.
தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் விரைந்து வந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், அருள்ராஜ் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...