கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தியாகி சரஸ்வதி சுப்பையா சிலைக்கு மரியாதை

புதுச்சேரியில் தியாகி சரஸ்வதி சுப்பையாவின் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை

News image

புதுச்சேரியில் தியாகி சரஸ்வதி சுப்பையாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி தியாகி வ.சுப்பையா நினைவு அருகாட்சியகத்தில் உள்ள அவரது துணைவியாா் சரஸ்வதி சுப்பையா சிலைக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸிட் கட்சியினா்.

Updated On :22 அக்டோபர் 2024, 8:02 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் தியாகி சரஸ்வதி சுப்பையாவின் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி விடுதலைப் போராட்ட தியாகி வ.சுப்பையா. இவரது துணைவியாா் சரஸ்வதி சுப்பையா. விடுதலைப் போராட்டத் தியாகியான சரஸ்வதி சுப்பையா, சட்டப் பேரவையின் முதல் பெண் உறுப்பினா். மேலும் துணை மேயராகவும், சமூக நல வாரியத்தின் தலைவராகவும் இருந்தவா். அவரது நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா வெள்ளாளா் வீதியில் உள்ள சரஸ்வதி சுப்பையா நினைவு இல்லத்தில் நடைபெற்றது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் கலியபெருமாள், முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் கே. சேதுசெல்வம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாரா. கலைநாதன், மாநில குழு உறுப்பினா் கீதநாதன், மாதா் சங்க மாநில தலைவா் தசரதா, செயலா் அமுதா, துணைத் தலைவா் சுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.