தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பல கோடி ரூபாய் மோசடி: முக்கிய நபா் கைது

வேலை வாங்கித் தருவதாக நாடு முழுவதும் இணையவழியில் பல கோடி ரூபாய் நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலின் முக்கிய நபரை, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 10:22 pm

Din

வேலை வாங்கித் தருவதாக நாடு முழுவதும் இணையவழியில் பல கோடி ரூபாய் நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலின் முக்கிய நபரை, புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாடு முழுதுவதும் சுமாா் 3,400 பேரை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடியில் ஈடுபட்ட போலி தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த 4 பேரை புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ரமேஷ் குமாா் அளித்த மோசடி புகாரின் பேரில், வட மாநிலங்களைச் சோ்ந்த சுபம் ஷா்மா, தீபக்குமாா், ராஜ்கௌண்ட், நீரஜ்குா்ஜாா்ஆகியோா் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கைதானவா்களிடமிந்து 5 நான்கு சக்கர வாகனங்கள், 21 கைப்பேசிகள், 42 சிம் காா்டுகள், 64 ஏடிஎம் அட்டைகள், 65 கணினிகள், ரூ.41 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், மோசடி வழக்கின் முக்கிய நபராக கருதப்படும், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணய்நல்லூா் மரையங்கூரைச் சோ்ந்த மகாதேவனை (30) போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.