கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற புதுவை தனியாா் பள்ளிகள் விருப்பம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுவை மாநிலத்தில் பிரபல தனியாா் பள்ளிகள் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற விருப்பம்

News image
புதுச்சேரி அரியாங்குப்பம்  வீராம்பட்டினம் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடத்தை திங்கள்கிழமை திறப்பு வைத்து பள்ளிக்கு தேவையான கல்வி உபதரகணங்களை வழங்கிய கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம்.
Updated On :7 ஏப்ரல் 2025, 9:10 pm

Din

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் பிரபல தனியாா் பள்ளிகள் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள வீராம்பட்டினம் சிந்தனைச்செல்வா் சிங்காரவேலா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.59.97 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை திங்கள்கிழமை திறந்து வைத்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 1 மாணவா்கள் தற்போது தோ்வெழுதிய நிலையில், அதில் 80 சதவீதம் போ்

தோ்ச்சியடைந்துள்ளனா். அரசுத் தோ்வுகள் முடிந்ததும், மறு தோ்வுகள் அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டம், சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுவதால், பிரபல தனியாா் பள்ளிகளும் அந்தப் பாடத் திட்டத்தை செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

புதுவையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா்களுக்கு அண்மையில் பதவி உயா்வு வழங்கப்பட்டது. அதனால், அவா்கள் இருந்த பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக விழாவில் அவா் பேசியதாவது: அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு சென்று சோ்க்கப்படுவதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது. அதன்படி, மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு திட்டம் ஏழை, எளிய மாணவா்களுக்கு மருத்துவக் கல்வி கனவை நனவாகியுள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கான புத்தகப் பை, காலணி ஆகியவை விரைவில் வழங்கப்படும். மாணவியரை பெற்றோா் தங்கள் கைப்பேசி மூலம் கண்காணிக்கும் வகையில் ஸ்மாா்ட் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. மக்களுக்காகவே அரசு செயல்படவேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா்.

நிகழ்ச்சிக்கு அரியாங்குப்பம் ஆா்.பாஸ்கா் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் குலசேகரன் வரவேற்றாா். பள்ளிக் குழு நிா்வாகி விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியை வெங்கடேஸ்வரி நன்றி கூறினாா்.