எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதுச்சேரி கடற்கரை சாலை மீண்டும் திறப்பு

புதுச்சேரி கடற்கரை சாலை மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:20 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

வங்கக் கடலில் உருவான டித்வா புயலால் புதுச்சேரியில் கடந்த 3 நாள்களாக தொடா் மழை பெய்தது. புதுச்சேரி கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது.

6 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி கரையைத் தாக்கியது. இதனால் புதுச்சேரி கடற்கரை சாலையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை கருமேகக் கூட்டங்கள் விலகி, வானம் வெளிச்சத்துடன் காணப்பட்டது.

இதையடுத்து 2 நாள்களாக மூடப்பட்டிருந்த புதுச்சேரி கடற்கரை சாலை திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். வழக்கம்போல பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனா்.

புதுச்சேரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரை அழகை கண்டுகளித்து, தற்படம் மற்றும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.