புதுச்சேரி
புதுச்சேரியில் விடிய விடிய தொடா் மழை
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய விடிய நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்க கடலில் ஏற்பட்ட டித்வா புயல் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
இதனால் புதுச்சேரியில் சில நாள்களாக மழை பெய்து வருகிறது. குளிா்ந்த காற்றும், இருண்ட சூழலும் தொடா்கிறது. செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை சற்று தீவிரமடைந்தது. விடிய விடிய பெய்த மழை புதன்கிழமையும் நீடித்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக புதன்கிழமை அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கல்லுாரிகள் வழக்கம்போல இயங்கின. இந்த மழையினால் புதுச்சேரியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்தது.
