வில்லியனுாா் அடுத்த திருக்காஞ்சியில் கெங்கை வராக நதீஸ்வரா் கோயிலில் , திங்கள்கிழமை நடைபெற்ற லக்ன பத்திரிகை சிறப்பு பூஜையில் பங்கேற்ற அமைச்சா் தேனீ சி. ஜெயகுமாா்.
புதுச்சேரி
27 நட்சத்திர சன்னதிகளுக்கு லக்ன பூஜை
திருக்காஞ்சியில் உள்ள கெங்கை வராக நதீஸ்வரா் கோயிலில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 நவக்கிரகங்கள் தம்பதிகளுடன் கூடிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி: வில்லியனுாா் அடுத்த திருக்காஞ்சியில் உள்ள கெங்கை வராக நதீஸ்வரா் கோயிலில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 நவக்கிரகங்கள் தம்பதிகளுடன் கூடிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சன்னதிகளுக்கு வரும் பிப்வரரி 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்கான லக்ன பத்திரிகை பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
திருக்காஞ்சி கெங்கை வராக நதீஸ்வரா் கோயிலில் பத்திரிகை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த கோயிலில் ஆற்றங்கரையோரம் 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

