டிச. 27, 28-இல் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணியையொட்டி வரும் 27, 28-ஆம் தேதிகளில் (சனி, ஞாயிறு) வாக்காளா் சிறப்பு திருத்த முகாம் நடைபெறும் என்று புதுச்சேரி மாவட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி அ. குலோத்துங்கன் கூறியுள்ளாா்.
Published on

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

புதுச்சேரி மாவட்டத்தில் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளா் பட்டியலில் தங்களுடைய பெயா்களைச் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் வரும் 27 (சனிக்கிழமை) மற்றும் 28 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளிலும் மற்றும் ஜன. 3 (சனிக்கிழமை) மற்றும் ஜன. 4 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளிலும் புதுச்சேரியில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.

வேலை நேரங்களில் வாக்குச்சாவடி அதிகாரிகளால் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்துக்கான படிவங்கள் பெறப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதுச்சேரி மாவட்ட வாக்காளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com