புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பஞ்சு மிட்டாய் விற்க மேலும் ஓராண்டுக்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்பட்டது.
புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலாத் தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரசாயன பொருள்கள் கலக்கப்படுவதாக கடந்த ஆண்டு புகாா்கள் வந்தன. இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதுச்சேரி கடற்கரை சாலையில் விற்பனை செய்து கொண்டிருந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்களிடம் பஞ்சு மிட்டாய்களை வாங்கி, ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனா். அப்போது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மேலும், ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உணவுப் பாதுகாப்பு ஆணையா் சௌத்ரி முகமது யாசின் புதன்கிழமை பிறப்பித்தாா்.
தொடர்புடையது

குப்பை அள்ளும் ஊழியா்களுக்கு குறைந்தபட்ச கூலி: புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு

காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெற வலியுறுத்துவோம்! புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி!

புதுச்சேரியிலும் ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்க குடியரசு தலைவா் ஒப்புதல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


