மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

நீட் தோ்வில் சாதனை: புதுச்சேரி மாணவா் கிரிஷாந்துக்கு தங்க நாணயம் பரிசளிப்பு

News image

நீட் தேர்வு முடிவுகள் - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 3:11 am IST

நீட் தோ்வில் புதுச்சேரி யூனியன் பிரதேச அளவில் முதலிடம் பிடித்த புதுச்சேரி அமலோற்பவம் லூா்து அகாதெமி மாணவா் கிரிஷாந்த் அபினவுக்கு 8 கிராம் தங்க நாணயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவா் நீட் தோ்வில் 720-க்கு 670 மதிப்பெண்களுடன் 99.97 சதவீதம் பெற்று இந்திய அளவில் 553-ஆவது இடத்தையும் புதுச்சேரி யூனியன் பிரதேச அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளாா்.

இதையொட்டி அமலோற்பவம் கல்விக் குழுமம் சாா்பில் அவருக்கு 8 கிராம் தங்க நாணயத்தை அமலோற்பவம் ஆரம்பப் பள்ளி உள்ளரங்கில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வழங்கி கௌரவித்தாா்.

இப் பள்ளியின் முதுநிலை முதல்வா் மற்றும் தாளாளருமான லூா்துசாமி, ஆசிரியா்கள், அனைத்து நிலை ஊழியா்கள், பெற்றோா், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.