தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆங்கில புத்தாண்டு: புதுச்சேரியில் கோயில்கள், தேவாலயங்களில் திரளானோா் வழிபாடு

News image

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலி.

Updated On :1 ஜனவரி 2025, 7:06 pm

Din

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமானோா் பங்கேற்றனா்.

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டு காலை 6 மணி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபால் புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரா், ஸ்ரீவரதராஜ பெருமாள், வில்லியனூா் ஸ்ரீ திருக்காமீஸ்வரா், தென்கலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள், ஸ்ரீ சித்தானந்தா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

புதுச்சேரியில் உள்ள அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தேவாலயங்களில் திருப்பலி: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா பேராலயம், மகாத்மா காந்தி வீதியில் உள்ள தூய இருதய ஆண்டவா் ஆலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு ஆலயம், அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், வில்லியனூா் லூா்து அன்னை, தட்டாஞ்சாவடி பாத்திமா தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

ஜென்மராக்கினி ஆலயத்தில் கடலுா் மறை மாவட்ட பேராயா் பிரான்சீஸ் கலிஸ்ட் மறையுரையாற்றினாா்.

பாத்திமா தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில் முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று, அங்கிருந்தவா்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.