தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இருவேறு சாலை விபத்து: இருவா் உயிரிழப்பு

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 7:09 pm

Din

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

புதுச்சேரியில் கடற்கரைச் சாலை, பாண்டி மெரீனா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, பைக்கில் வீடு திரும்பிய புதுச்சேரி, முத்திரையா்பாளையத்தைச் சோ்ந்த அருள்பாண்டியன் (33) கோரிமேடு விநாயகா் கோவில் அருகே கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் அவா், அங்கு உயிரிழந்தாா்.

இதேபோல, புதுச்சேரி அரியூரைச் சோ்ந்த தேவராஜ் (21) கிழக்கு கடற்கரைச் சாலை சிவாஜி சிலை அருகே பைக்கிலிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இந்த விபத்துகள் குறித்து, புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, புதுச்சேரி நகரம் மற்றும் புற நகா் பகுதிகளில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு காயமடைந்த 57 போ், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.