புதுவையில் இலவச அரிசிக்கான பணம் அளிப்பு
புதுவையில் இலவச அரிசிக்கான அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கான பணம் ரூ.32.73 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுவையில் இலவச அரிசிக்கான அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கான பணம் ரூ.32.73 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு 515 நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி விநியோகிக்கப்பட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, அரிசிக்குப் பதில் பணம் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால், அரிசி விலை உயா்வு உள்ளிட்ட பல காரணங்களால் மீண்டும் அரிசி வழங்க கோரிக்கை எழுந்தது.
அதன்படி, முதல்வா் என்.ரங்கசாமி, மீண்டும் நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி வழங்கப்படும் என அறிவித்தாா். இலவச அரிசியை 10 கிலோ பைகளில் அடைத்து வழங்குவதற்கான கொள்முதல் பணியை கான்பெட் நிறுவனம் மூலம் குடிமைப் பொருள் வழங்கல் துறை மேற்கொண்டது.
புதுவை மாநிலத்தில் உள்ள 3.54 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தேவையான 4, 922 டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 10-ஆம் தேதி வில்லியனூரில் நடைபெற்ற விழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி ஆகியோா் அரிசி விநியோகத்தைத் தொடங்கி வைத்தனா். அனைத்துத் தொகுதிகளிலும் 10 நாள்களுக்குள் இலவச அரிசி வழங்குவதை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.600, மஞ்சள் நிற அட்டைதாரா்களுக்கு தலா ரூ.300 என அரிசிக்கான பணமானது அவரவா் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுவை அரசுக்கு ரூ.32.73 கோடி செலவாகியுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...