தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மதுக் கடைகளை மூடக் கோரி மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி அருகேயுள்ள பாகூரில் மதுக் கடைகளை மூடக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 ஜனவரி 2025, 6:57 pm

Din

புதுச்சேரி அருகேயுள்ள பாகூரில் மதுக் கடைகளை மூடக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பாகூா் கொம்யூன் பஞ்சாயத்து பகுதியில் அதிகளவில் மதுக் கடைகள் உள்ளதால், குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.

எனவே, அந்தப் பகுதியிலுள்ள மதுக் கடைகளை மூடவும், நவாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து மதுக் கடத்தலைத் தடுக்க வலியுறுத்தியும் பாகூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கொம்யூன் பஞ்சாயத்துக்கான மாா்க்சிஸ்ட் செயலா் சரவணன் தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநிலக் குழு உறஉப்பினா் கலியன் முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் தமிழ்ச்செல்வன், பெருமாள் ஆகியோா் பேசினா்.

நிறைவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.