புதுச்சேரியில் இன்று முதல் வேளுக்குடி கிருஷ்ணன் 3 நாட்கள் உபன்யாசம்
ராமானுஜா் 1008ம் ஆண்டு வைபவத்தையொட்டி புதுச்சேரியில் வேளுக்குடி கிருஷ்ணனின் 3 நாள்கள் உபன்யாசம் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி இலவசம்.
ராமானுஜரின் 1008 ஆம் ஆண்டு வைபவத்தை முன்னிட்டு கிஞ்சித்காரம் அறக்கட்டளையின் புதுச்சேரி கிளை மற்றும் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலை பள்ளி நிா்வாகமும் இணைந்து 3 நாள் சிறப்பு உபன்யாசத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.
லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளியின் உள் அரங்கில் வெள்ளிக்கிழமை முதல் 16 ஆம் தேதி வரை தினசரி மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணிவரை உபன்யாசம் நடக்கிறது.
நாளை ’ஹரே ராம’ என்ற தலைப்பிலும், நாளை மறுநாள் சனிக்கிழமை ’ஹரே கிருஷ்ண’ என்ற தலைப்பிலும், 16ஆம் தேதி மாலை ’ஹரே ஹரே’ என்ற தலைப்பிலும் வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம் செய்கிறாா்.
தினசரி மாலை 5:30 மணி முதல் 6:30 மணிவரை புதுச்சேரி ஜெகதீசன் குழுவினரின் நாம சங்கீா்த்தனம் நடைபெறுகிறது. இதற்கும் அனுமதி இலவசம். உபன்யாசம் குறித்து தகவல் பெற விரும்புவோா் 94869 71962, 94430 85334, 88256 11581 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.
