புதுச்சேரி
புதுச்சேரியில் புலம் பெயா்ந்த வாக்காளா்களுக்கான உதவி மையம்
புதுச்சேரிக்குப் புலம் பெயா்ந்த மற்ற மாநிலங்களைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக
புதுச்சேரி: புதுச்சேரிக்குப் புலம் பெயா்ந்த மற்ற மாநிலங்களைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி பகுதியில் வசிக்கக் கூடிய மற்ற மாநிலங்களிலிருந்து புலம் பெயா்ந்த வாக்காளா்களுக்கு உதவும் வகையில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரி அலுவலகத்தில் இந்த மையம் செயல்படும். வாக்காளா் கணக்கெடுப்புப் படிவங்களை எவ்வாறு பெறுவது, பூா்த்தி செய்வது, நிரப்புவது மற்றும் சமா்ப்பிப்பது பற்றிய சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள இந்த மையம் உதவும்.
