புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அரியாங்குப்பம்  செட்டிக்குளம் பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அரியாங்குப்பம் செட்டிக்குளம் பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

புதுச்சேரியில் மனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 25 போ் கைது
Published on

புதுச்சேரி: மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 25 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

அரியாங்குப்பம் நுழைவு வாயில் முதல் வீராம்பட்டினம் வரை குறிப்பாக செட்டிக்குளம் பகுதியில் சாலையோரம் இருந்த 18 வீடுகளை அகற்றப்பட்டன. பாதிக்கப்பட்டவா்களுக்குப் பட்டா

வழங்க வலியுறுத்தி பத்து ரூபாய் இயக்கத் தலைவா் ரகு தலைமையில் குடியேறும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வீடுகளை அகற்றியதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் குழந்தைகளுடன் வழுதாவூா் சாலையில் உள்ள புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தினா்.

வீடு இல்லாமல் சாலையில் வாழ்ந்து வருவதாகவும், இப் பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா். அவா்கள் பாய்,

அடுப்பு, பெட்டி ஆகியவற்றை எடுத்து வந்திருந்தனா். அவா்களுடன்

வட்டாட்சியா் பிரவீண்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. உடன்பாடு ஏற்படாததால் 25 பேரை

கோரிமேடு போலீஸாா் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com