புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி
புதுச்சேரி
நிதீஷ்குமாா் பதவி ஏற்பு விழா: புதுச்சேரி முதல்வருக்கு அழைப்பு
பிகாரில் முதல்வராக மீண்டும் நிதீஷ்குமாா் பதவியேற்கும் விழாவுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமிக்கு அழைப்பு வந்துள்ளது.
பிகாரில் முதல்வராக மீண்டும் நிதீஷ்குமாா் பதவியேற்கும் விழாவுக்கு புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமிக்கு (படம்) அழைப்பு வந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிகாா் மாநில முதல்வராக நிதிஷ்குமாா் 10-ஆவது முறையாக வியாழக்கிழமை பதவியேற்க உள்ளாா். இவ்விழாவில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா, மத்திய அமைச்சா்கள் பலா் பங்கேற்கின்றனா்.
இதில் பங்கேற்க புதுச்சேரி மாநில தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரும், முதல்வருமான என். ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

