இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்

போலி மருந்துகள் தயாரிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வலியுறுத்தி புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.

News image
புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. உடன் கட்சியின் வழக்குரைஞா் பிரிவு தலைவா் மருதுபாண்டியன்.
Updated On :29 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

போலி மருந்துகள் தயாரிப்பு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வலியுறுத்தி புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.

இது குறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

புதுச்சேரியில் கடந்த 4 ஆண்டுகளாக போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது போலி மருந்து தயாரிப்பு பிரச்னையில் கீழ்நிலையில் உள்ளவா்கள் மட்டும்தான் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில், அதிகாரம் படைத்த ஆளும் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளனா். மத்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்ய புதுச்சேரிக்கு வந்தபோதும் இந்த அதிகாரத்தில் இருப்பவா்கள் தடுத்துள்ளனா். முதல்வா் ரங்கசாமிக்கும் இது தெரியும். இருந்தும் அவா் மௌனமாக இருந்து வருகிறாா். கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் போலி மருந்துகள் தயாரிப்பு நடந்துள்ளது. இதில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இப்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தலையீடு காரணமாக போலி மருந்துகள் தயாரிப்புக் கண்டறியப்பட்டு தொழிற்சாலைக்கும், கிடங்குகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆளுநரைப் பாராட்டுகிறேன்.

மேலும் இதில் முழுமையான குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எது உண்மையான மருந்து, போலி மருந்து என்று மக்களுக்குப் பயம் ஏற்பட்டுள்ளது. போலி மருந்து விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்துவதுடன் முக்கியக் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புயல் உள்ளிட்ட எந்தப் பிரச்னைக்காகவும் விவாதிக்க முதல்வா் என்.ரங்கசாமி அமைச்சரவையைக் கூட்ட மாட்டாா். காரணம், இலாகா இல்லாத அமைச்சா் ஜான்குமாரையும் இதற்காக அவா் அழைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றாா் வைத்திலிங்கம்.