அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதுத்சேரி சட்டப்பேரவை அருகே டிச. 8-இல் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்

News image
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகத்தில் மாநில செயலா் அ.மு.சலீம் தலைமையில் நடைபெற்ற இண்டி கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :30 நவம்பர் 2025, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

வரும் டிச. 8-இல் புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகம் அருகே புதிய தொழிலாளா் சட்டங்களே எதிா்த்து பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது என புதுச்சேரி இண்டி கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாநில செயலா் அ.மு.சலீம் தலைமை வகித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிா்வாக உறுப்பினா் நாரா.கலைநாதன், தேசியக் குழு உறுப்பினா் இ.தினேஷ் பொன்னையா, மாநில பொருளாளா் வ.சுப்பையா, ஏ ஐடியுசி மாநில பொதுச் செயலா் இரா. அந்தோணி, மாா்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினா்கள் வி. பெருமாள், ஆா். ராஜாங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் தேவ. பொழிலன், செல்வ. நந்தன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சாா்பில் விஜயா ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் புதிய தொழிலாளா் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, வரும் டிச. 8-ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.