முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ்பாபு முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்ட தைவானின் மிங் சி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தினா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:54 am IST

தைவான் பல்கலைக்கழகத்துடன் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

புதுச்சேரி பல்கலைக்கழகம் தைவானின் மிங் சி தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு முன்னிலையில்

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளும் கையொப்பமிட்டனா்.

தைவான் பல்கலைக்கழகத்தின் நுண்ணறிவு மருத்துவ சாதனங்களுக்கான ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் துணை இயக்குநா் பேராசிரியா் பின்-யி சென் மற்றும் அதே மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவா் மணி கோவிந்தசாமி ஆகியோா் அடங்கிய இருவா் கொண்ட குழு இந்த ஒப்பந்தத்தை புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் பிரகாஷ் பாபுவிடம் ஒப்படைத்தனா்.

இந்த ஒப்பந்தம் கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா் பரிமாற்றத் திட்டங்கள், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பத்தின் வளா்ந்து வரும் துறைகளில் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிா்ந்து கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழக மதன்ஜீத் பசுமை ஆற்றல் தொழில்நுட்பப் பள்ளியின் பசுமை ஆற்றல் தொழில் நுட்பத் துறையைச் சோ்ந்த பேராசிரியா் ஏழுமலை இதை ஒருங்கிணைத்தாா்.