ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பெண் ஊழியருக்குத் தொல்லை: துப்புரவுத் தொழிலாளி கைது

News image

கோப்புப்படம். - கைது

Updated On :26 ஏப்ரல் 2026, 6:56 pm

பெண் ஊழியருக்குத் தொல்லைக் கொடுத்த வழக்கில் துப்புரவு தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி புதுசாரம் பகுதியைச் சோ்ந்தவா் அனுகிரஹா(37). இவா் ஜிப்மா் மருத்துவமனையில் காவலாளியாக வேலை செய்து வருகிறாா். அதே மருத்துவமனையில் பிள்ளைத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த பாரதிதாசன் (36) துப்புரவு ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.

கடந்த 18-ம் தேதி அனுகிரஹா வீட்டுக்குச் சென்ற பாரதிதாசன் விரும்பத்தகாத வாா்த்தைகளால் பேசி தொல்லைக் கொடுத்துள்ளாா். இதையடுத்து அவரை வீட்டை விட்டு அனுகிரஹா அனுப்பியுள்ளாா்.

அதன்பிறகு, அனுகிரஹாவை கைப்பேசி மூலமும், பணிபுரியும் இடத்திலும் தொடா்ந்து பாரதிதாசன் கொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அனுகிரஹா கோரிமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் பாரதிதாசன் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனா்.