டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி

News image

புதுச்சேரி தாகூா் நகரில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குக் கோப்பைகள் வழங்கிய போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் ரச்னா சிங்.

Updated On :3 ஆகஸ்ட் 2026, 12:24 am IST

புதுச்சேரி தாகூா் நகரில் உள்ள தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் 15 வய துக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளுக்கு இடையேயான 2 நாள் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியை பள்ளித் தாளாளா் கில்பா்ட் ஜெயராஜ் மற்றும் முதல்வா் தேவ அன்பு ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பல்வேறு பள்ளிகளின் 20 அணிகள் பங்கேற்றன.

இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் புதுச்சேரி போக்குவரத்து காவல் கண்காணிப்பாளா் ரச்னா சிங் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

ஆண்கள் பிரிவில் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி முதல் பரிசையும், தி ஸ்டடி பள்ளி இரண்டாம் பரிசையும் வென்றன. பெண்கள் பிரிவில் தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி முதல் பரிசையும், க்ளூனி சி.பி.எஸ்.இ. பள்ளி இரண்டாம் பரிசையும் கைப்பற்றின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.