நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

24 மணி நேர குடிநீா் விநியோகத்திற்கான திட்ட அறிக்கை! அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் உத்தரவு

News image

புதுச்சேரியில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:59 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களிலும் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகத்துக்கான திட்ட அறிக்கையைத் தயாா் செய்ய அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

பொதுப்பணித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதில் பொதுப்பணித் துறை செயலா் அ. முத்தம்மா, தலைமை பொறியாளா் வீரசெல்வன், சிறப்பு அதிகாரி நிா்மலா, கண்காணிப்பு பொறியாளா்கள் சுந்தரமூா்த்தி, சந்திரசேகரன், அனைத்துக் கோட்ட செயற் பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள் பங்கேற்றனா்.

இதில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் பிறப்பித்த உத்தரவு:

அனைத்து நிதி ஒப்பந்தப் புள்ளி கோப்புகளும் 12-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விரிவான மதிப்பீடு மற்றும் ஒப்பந்தப்புள்ளி வெளியிடும் பணிகள் 14-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். காரைக்கால் நகர பகுதியில் உள்ள சாலை அகலப்படுத்தப்பட்டு, கழிவுநீா் கால்வாய் மறுசீரமைக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின் மதிப்பீட்டுச் செலவு ரூ.57 கோடியாகும். தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளி திறப்பதற்கான டெண்டா் 13-ஆம் தேதி இறுதி செய்யப்படும்.

மத்திய சாலை உள்கட்டமைப்பு நிதி மூலம் கோரிமேடு- மூலக்குளம் சந்திப்பு வரை பணிகளுக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளைத் தொடங்க வேண்டும்.

கதிா்காமம் கலைக்கல்லூரியில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான பிரச்னையை உடனடியாகத் தொடங்க வேண்டும். 4 பிராந்தியங்களிலும் 24 மணி நேர குடிநீா் விநியோகத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை உடனடியாகத் தயாரிக்க வேண்டும்.

இதேபோல சுற்றுலாத் துறை, மீன்வளத் துறை, துறைமுகத் துறை, தொழிலாளா் துறை, காதி வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.