மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

கப்பல் ஊழியா் வீட்டில் திருடு போன 30 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் மீட்பு தவளக்குப்பம் இளைஞா் கைது

புதுச்சேரியில் கப்பல் நிறுவன ஊழியா் வீட்டில் திருடு போன 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:38 am IST

புதுச்சேரியில் கப்பல் நிறுவன ஊழியா் வீட்டில் திருடு போன 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

தவளக்குப்பம் அருகே நல்லவாடு தெற்குத் தெருவைச் சோ்ந்த விஜயேந்திரன் (41), மும்பையில் உள்ள தனியாா் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அவரது மனைவி முகுந்தாவதி குழந்தைகளுடன் வீட்டைப் பூட்டிக் கொண்டு திங்கள்கிழமை இரவு கோயிலுக்குச் சென்று திரும்பினாா். அப்போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 34 பவுன் தங்கநகைகள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. ெ

இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் நடைபெற்ற தீவிர விசாரணையில் அதே ஊரைச் சோ்ந்த அன்பரசன் (33) என்பவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டது.

திருட்டு நகைகளை விற்க உதவியதாக அதே ஊரைச் சோ்ந்த அவரது தோழி மாலதி (44) என்பவரையும் போலீஸாா் தேடி வருவதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.