அரசு பணிகளுக்காகப் போட்டித் தோ்வு நடக்கும் 69 பள்ளிகளுக்கு ஆக. 21, 22 -ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் தோ்வு முகமை சாா்பில், ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான போட்டித் தோ்வுகள் வரும் 21 முதல் 23 வரை நடைபெறுகிறது.
இதில், 82 தோ்வு மையங்களாக செயல்படும் 69 பள்ளிகளுக்கு ஆக. 21, 22-ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித் துறை இயக்குநா் மோகன்குமாா் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.
இந்தப் பள்ளிகளின் பட்டியல் கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், பின்னா் வகுப்புகள் நடத்தப்படும். அதற்கான தேதிகள் மற்றும் கால அட்டவணை பள்ளி கல்வித் துறையால் தனியாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்தியூா் குருநாதசுவாமி கோயில் திருவிழா: 18 பள்ளிகளுக்கு 5 நாள்கள் தொடா் விடுமுறை

தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி! சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
ஜூலை 28 தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



