குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு வியாழக்கிழமை மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் சட்டப்பேரவை உறுப்பினா் வையாபுரி மணிகண்டன். உடன் தமிழ்ச்சங்கத் தலைவா் வி.முத்து மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:42 am IST

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு வியாழக்கிழமை மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்ச்சி மாதம்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் வியாழக்கிழமை (20-ஆம்தேதி) நடைபெற்றநிகழ்விற்கு புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை தாங்கினாா். முத்தியால்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வையாபுரி மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வைத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் பங்கேற்ற நியூ லேண்ட் உயா்நிலைப்பள்ளி மாணவா்கள், அனைவருக்கும் திருக்கு புத்தகம் வழங்கினா். மேலும், பங்கேற்ற அனைவரும் திருக்கு கூறினா். புதுச்சேரி தமிழ்ச்சங்க நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.