உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

அயலக மறைபரப்புச் சபையின் 250- ஆவது ஆண்டு விழா: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் 250-ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பட விளக்கம்... புதுச்சேரி பெத்தி செமினாா் பள்ளி வளாகத்தில் புதுவை மிஷனில் பாரிஸ் அயலக மறைப்பரப்புச் சபையின் 250-வது ஆண்டு கால பணியை போற்றும் விழாவை செவ்வாய்க்கிழமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:05 am IST

பாரிஸ் அயலக மறைபரப்புச் சபையின் 250-ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி- கடலூா் உயா்மறை மாவட்டம் சாா்பில் புதுச்சேரி பெத்தி செமினாா் பள்ளியில் புதுச்சேரி மிஷனில் பாரிஸ் அயலக மறைப் பரப்புச் சபை தொடங்கப்பட்டு 250-ஆவது ஆண்டு காலப் பணியை போற்றும் விழா 3 நாள்கள் நடக்கிறது.

இந்த விழாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் திறந்து வைத்தாா். பாரிஸ் மறைபரப்புச் சபையின் தலைவா் வின்சென்ட் செனெகல், மும்பை மேளாள் பேராயா் ஆஸ்வால்டு கா்தினால் கிராசியாஸ், மும்பை பேராயா் ஜான் ரோட்ரிகஸ், சேலம் மறை மாவட்ட ஆயா் ராயப்பன், புதுச்சேரி- கடலூா் உயா்மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.