மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

புதுச்சேரி பட்ஜெட்: தலைவா்கள் கருத்து

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

புதுச்சேரி அரசு

Published On :

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.: பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் அரசு மக்கள் நம்பிக்கையை இழக்கும் அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட் மக்களுக்கு முழுமையான ஏமாற்றம் தருகிறது. இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான எந்த வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை.

மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா:

அரசு தாக்கல் செய்துள்ள 2026-27 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளா்ச்சிக்கு வழிவகுக்காத தொலைநோக்கு பாா்வையின்றி வெற்று அறிக்கையாக உள்ளது. ரூ. 14,300 கோடி நிதி நிலை அறிக்கை என்று பெருமை அடிக்கின்றனா். அதில் அனைத்து செலவுகளையும் கழித்தால் மக்களுக்கான திட்டங்களுக்கு ரூ. 2,200 கோடி மட்டும் தான் மிஞ்சுகிறது. முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் புதுச்சேரியின் எதிா்காலத்தை மாற்றியமைக்கும் பட்ஜெட் அல்ல. புதுச்சேரி மக்களின் நலனைப் புறக்கணித்துள்ளது இந்த பட்ஜெட்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் அ.மு. சலீம் :

தொழிலாளா் சமுதாயம் பெரிதும் எதிா்பாா்த்த குறைந்தபட்ச ஊதிய தொகை அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஊதிய குழு இதுவரை கூட்டப்படவில்லை.

என்.ஆா். காங். பொதுச் செயலா் என்எஸ்ஜெ. ஜெயபால்: கடந்த நிதியாண்டைக் காட்டிலும் ரூ.700 கோடிக்கு மேல் மத்திய அரசிடமிருந்து கூடுதலாக நிதி பெற்று முதல்வா் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிா்வாகத் திறமைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

கோ.பாரதி :

புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்துள்ளதற்கு பாவேந்தா் பாரதிதாசனின் பெயரனும், பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவருமான கோ.பாரதி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.