புதுச்சேரி செவிலியா் பணிக்கு தற்காலிக தோ்வு பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் செவிலியா் பணிக்கான தற்காலிக தோ்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபணை இருந்தால் ஜன. 10- ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
Published on

புதுச்சேரியில் செவிலியா் பணிக்கான தற்காலிக தோ்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபணை இருந்தால் ஜன. 10- ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 226 செவிலியா் அதிகாரி பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆன்லைன் மூலம் 4,714 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, இடஒதுக்கீடு விதிகளைப் பின்பற்றி தற்காலிகப் பட்டியல், காத்திருப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் தங்கள் மதிப்பெண், விண்ணப்ப நிலையை ஆன்லைனில் சரிபாா்க்கலாம். ஆட்சேபணைகள் இருந்தால் வரும் 10-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தெரிவிக்கலாம் என கல்லூரி இயக்குநா் உதயசங்கா் தெரிவித்துள்ளாா்.

மேலும், விவரங்களுக்கு அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதிய உணவு இடைவேளை தவிா்த்து 91508 81624, 0413 2277545 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com