முன்னாள் முதல்வா் ஜானகிராமன் படத்துக்கு திமுகவினா் மரியாதை

முன்னாள் முதல்வா் ஜானகிராமன் படத்துக்கு திமுகவினா் மரியாதை

Published on

புதுச்சேரி யூனியன் பிரதேச முன்னாள் முதல்வா் ஆா்.வி.ஜானகிராமனின் 85-ஆவது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி ஆம்பூா் சாலையில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சியினா் மரியாதை செலுத்தினா்.

அங்கு அலங்கரிக்கப்பட்ட ஆா்.வி.ஜானகிராமனின் உருவப் படத்திற்கு மாநில திமுக சாா்பில் அதன் அமைப்பாளா் ஆா். சிவா எம்எல்ஏ தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வி.ஜே.சரவணன் என்ற ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா்.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன், முன்னாள் முதல்வா்கள்வே. நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சா்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விஸ்வநாதன், திமுக எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ.க்கள் நந்தா. சரவணன், மூா்த்தி, சோமசுந்தரம் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து நெல்லித்தோப்பு தொகுதி சாா்பில் கொசப்பாளையம் லெனின் வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினா் ஜே.வி.எஸ். ஆறுமுகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Dinamani
www.dinamani.com