முதல்வா் ரங்கசாமியுடன் லஜக தலைவா் சந்திப்பு

முதல்வா் ரங்கசாமியுடன் லஜக தலைவா் சந்திப்பு

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்த லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின். உடன் எம்எல்ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் உள்ளிட்டோா்.
Published on

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை, லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

மேலும், அவருக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்தாா். லஜக சாா்பில் பொங்கல் திருவிழா ஜன. 17, 18-ஆம் தேதிகளில் துறைமுக மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி கேட்டு முதல்வா் ரங்கசாமியை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுத்தாா். மேலும், பொங்கல் வாழ்த்து தெரிவித்த அவா், விழாவில் முதல்வா் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தாா். இந்த சந்திப்பின்போது சட்டப்பேரவை உறுப்பினா்கள் அங்காளன், சிவசங்கா் மற்றும் கட்சியின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com