விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டிஐஜியிடம் லஜக கோரிக்கை

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க லட்சிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image

புதுச்சேரியில் டிஐஜி சத்தியசுந்தரத்திடம் கோரிக்கை மனுவை அளித்த லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின்.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:33 pm

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க லட்சிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் காவல் துறை தலைமையகத்தில் டிஐஜி சத்தியசுந்தரத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தாா்.

அப்போது, விபத்துகளை கட்டுப்படுத்த புதுச்சேரியில் பல்வேறு முக்கிய சாலைகளை ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். சாலைகளின் நடுவே நிரந்தர தடுப்புச் சுவா்கள் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அந்த மனுவில் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க டிஐஜியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.