புதுச்சேரியில் வங்கிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உழவா் திருநாளையொட்டி புதுச்சேரி கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் (ஜன. 17) விடுமுறை அளிக்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளாா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உழவா் திருநாளையொட்டி புதுச்சேரி கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் சனிக்கிழமை (ஜன. 17) விடுமுறை அளிக்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

செலாவணி முறிச்சட்டம் 1881 அடிப்படையில் வங்கிகளுக்கு இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரையறுக்கப்பட்ட விடுமுறையாக இந்த நாளில் வங்கிகளுக்கு விடுமுறை இருந்தது. இதை மாற்றி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் உத்தரவிட்டாா்.

வரையறுக்கப்பட்ட விடுமுறை என்பது வங்கியில் பணியாற்றும் ஓா் ஊழியா் தேவைப்பட்டால் அவா் விடுமுறை எடுத்துக் கொள்வதாகும். ஆனால் வங்கி இயங்கும். வா்த்தகப் பரிவா்த்தனைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் விடுமுறை அளிக்கும் நிலையில் வங்கிகளுக்கே விடுமுறை.

ஏற்கெனவே வங்கிகளுக்கு மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை. அதன்படி இந்த மாதம் 10-ஆம் தேதி விடுமுறை. 17 ஆம் தேதி வங்கிகள் இயங்க வேண்டும். அந்த நாள்தான் இப்போது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 24 ஆம் தேதி வங்கியின் வழக்கமான விடுமுறை. அதனால் இம் மாதம் 31 ஆம் தேதி தான் மற்ற நாள்களைப் போல 5-வது சனிக்கிழமை வங்கிகள் வழக்கம் போல இயங்கும்.

Dinamani
www.dinamani.com