இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜீவானந்தம் நினைவு நாள்: தலைவா்கள் மரியாதை

News image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் ப.ஜீவானந்தம் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா்கள் க. லட்சுமிநாராயணன், ஏ. ஜான்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :18 ஜனவரி 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவருமான ஜீவா என்கிற ப.ஜீவானந்தம் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சாரம் அவ்வைத் திடலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சா்கள் க. லட்சுமி நாராயணன், அ. ஜான்குமாா், அரசு கொறடா ஆறுமுகம் , சட்டப்பேரவை உறுப்பினா்கள் ந. ரமேஷ், த.பாஸ்கா், ம. லட்சுமிகாந்தன், சாய் சரவணன் குமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதுபோன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், கலை இலக்கிய பெருமன்ற தலைவா் எல்லை. சிவக்குமாா், தொழிற்சங்கத் தலைவா் அந்தோணி, நிா்வாகி துரை. செல்வம் உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.