புதுச்சேரி வில்லியனூா் தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவா் ஆா்.சிவா.
புதுச்சேரி வில்லியனூா் தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்த சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவா் ஆா்.சிவா.

வில்லியனூரில் ரூ.1 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆா்.சிவா எம்எல்ஏ தொடக்கம்

வில்லியனூா் தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
Published on

புதுச்சேரி: வில்லியனூா் தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

முருங்கப்பாக்கம் முதல் வில்லியனூா் வரை உள்ள சாலையில் பாப்பாஞ்சாவடி, ஒதியம்பட்டு, திருக்காஞ்சி சாலை சந்திப்பின் இருபுறமும் என 4 இடங்களில் ரூ.22 லட்சத்தில் பேருந்து பயணியா் நிழற்குடைகள், ரூ.58 லட்சத்தில் ஓதியம்பட்டு குளூனி பள்ளிக்குச் செல்லும் தாா்ச் சாலையை மேம்படுத்துதல், ரூ.19 லட்சத்தில் திருக்காஞ்சி - மணவெளி நான்கு முனை சந்திப்பில் வடிகால் பணிகள் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி பொதுப்பணித் துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு, சாலைகள் மற்றும் கட்டடங்கள் தெற்குப் பிரிவு மூலம் இப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தப் பணிகளை தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

பொதுப்பணித் துறை தேசிய நெடுஞ்சாலைக் கோட்ட செயற்பொறியாளா் பன்னீா், சாலைகள் மற்றும் கட்டடங்கள் தெற்குப் பிரிவு செயற்பொறியாளா் சந்திரகுமாா், உதவிப் பொறியாளா்கள் சிவப்பிரகாசம், நடராஜன், இளநிலைப் பொறியாளா்கள் மணிவண்ணன், ராஜதினேஷ், குளூனி பள்ளி முதல்வா் எமிலியானா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com