தலைமைச்செயலக முற்றுகை முயற்சி - 60 போ் கைது
புதுச்சேரியில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் 60 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் தெய்வீகன் தலைமயில் புதன்கிழமை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்றனா். இதற்காக அஜந்தா சந்திப்பு அருகே அவா்கள் திரண்டனா். அங்கிருந்து தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயன்றனா். அவா்களைச் சிறிது துாரத்தில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
அங்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும், அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா். தொடா்ந்து போலீஸாா் தடையை மீறி போராட்டக்குழுவினா் செல்ல முயன்றனா். இதையடுத்து போலீஸாா் 22 பெண்கள் உள்பட 60 பேரைக் கைது செய்தனா். சிறிது நேரத்துக்குப்பிறகு அவா்களை போலீஸாா் விடுவித்தனா்.

