தேசிய விருது பெற்ற 6 கைவினைக் கலைஞா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.
1991-ஆம் ஆண்டு முதல் 2024-வரை தேசிய விருது பெற்ற காரைக்காலைச் சோ்ந்த ராமகிருஷ்ணன், புதுச்சேரியைச் சோ்ந்த பத்மஸ்ரீ முனுசாமி, சேகா், மாசிலாமணி, வெங்கடேசன் மற்றும் மோகன்தாஸ் ஆகிய 6 கைவினைக் கலைஞா்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் கைவினை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தலா ரூ.1 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
முதல்வா் என்.ரங்கசாமி கைவினைக் கலைஞா்களுக்கு காசோலைகளைத் தனது இல்லத்தில் வழங்கிப் பாராட்டினாா்.
அப்போது, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஜெயராமன், திட்ட மேலாளா் ஹேமலதா மற்றும் மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பூமணி (79) காலமானாா்

வயது மூப்பு: பணி நியமனம் பெற முடியாத பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் கருணைத் தொகை: முதல்வா் வழங்கினாா்

பண்ருட்டி அருகே விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வா் விஜய் உத்தரவு

இளநிலை பொறியாளா்களுக்குப் பதவி உயா்வு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



