முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

கோயில் குளங்கள் சீரமைப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி திருபுவனை பகுதியில் குளங்களைத் தூா்வாரி சீரமைக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

News image

புதுச்சேரி திருபுவனை பகுதியில் குளங்களைத் தூா்வாரி சீரமைக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

Updated On :11 ஜூலை 2026, 1:04 am IST

திருபுவனை பகுதியில் நடைபெற்று வரும் கோயில் குளங்களை தூா்வாரி சீரமைக்கும் பணிகளை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சுற்றுச்சூழல் மற்றும் நீா்நிலைகளை பாதுகாக்கும் வகையில், புதுச்சேரி மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சித் துறை மற்றும் திருவண்டாா் கோயிலில் இயங்கி வரும் தனியாா் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திருபுவனை குளம், திருவண்டாா்கோயில் அய்யனாா் கோயில் குளம், காட்டேரிக்குப்பம் மாரியம்மன் கோயில் குளம் உள்ளிட்ட 4 குளங்கள் தூா்வாரப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குளங்களை தூா்வாரி நீா் நிலைகளை மேம்படுத்தும் பணிக்காக தனியாா் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தாா்.

மேலும் ஆட்சியா் குலோத்துங்கன் கூறியது: பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், கிராமப்புறங்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும் நிலத்தடி நீா்மட்டத்தை மேம்படுத்தவும் குளங்களைத் தூா்வாரி நீா்நிலைகளை மேம்படுத்த வேண்டும்.

முக்கிய தொழில் நிறுவனங்கள் இதுபோன்று நீா்நிலைகளை தூா்வார முன்வர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து திருபுவனையில் இயங்கி வரும் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி மற்றும் கொத்தாபுரிநத்தம் அரசு உயா்நிலைப்பள்ளி ஆகியவற்றை பாா்வையிட்ட ஆட்சியா், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களிடமும் பள்ளிக்கு தேவையானவை குறித்து கேட்டறிந்தாா். மேலும் கொத்தாபுரிநத்தம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பல் மருத்துவ முகாமை அவா் பாா்வையிட்டாா். இப்பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு தனியாா் நிறுவனம் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின்போது உள்ளாட்சித் துறை இயக்குநா் ஆதா்ஷ், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எழில்ராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.