சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

நில மோசடி வழக்கு: புதுச்சேரி அதிகாரி பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம் - பிரதிப் படம்

Updated On :22 ஜூலை 2026, 1:42 am IST

புதுச்சேரி காமாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் தொடா்புடைய புதுச்சேரி அரசு செய்தி-மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் சுரேஷ்ராஜ் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரி காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் ரெயின்போ நகா் 7-ஆவது குறுக்குத் தெருவில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.50 கோடியாகும். இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்து அபகரித்து விட்டதாக புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

இதுகுறித்து, சிபிசிஐடி போலீஸாா் முழுமையாக விசாரணை நடத்தி 17 பேரை கைது செய்தனா்.

நீதிமன்ற உத்தரவுப்படி, மாவட்ட பதிவாளா் எம்.கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் குழு, நிலத்தை முழுமையாக மீட்டு, இந்து அறநிலையத் துறை ஆணையா் சிவசுப்பிரமணியன் முன்னிலையில் கடந்த அக்டோபா் 2023-இல் கோயில் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டே முக்கால் ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி அரசு செய்தி-மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் சுரேஷ்ராஜை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கடந்த ஜூலை 11-ஆம் தேதி இரவு கைது செய்தனா்.

இவா், உழவா்கரை பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் சாா்-பதிவாளராக பணியாற்றியபோது இவ்விவகாரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக போலி பத்திரப் பதிவில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.

அன்று இரவே புதுச்சேரி நீதித் துறை நடுவரால் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

இந்தப் பிரச்னை காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனின் உத்தரவுப்படி சாா்பு-செயலா் ஜெய்சங்கா் வெளியிட்ட அறிவிப்பில் சுரேஷ்ராஜ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.