முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

இளைஞா்களுடன் பிரதமா் காணொலியில் கலந்துரையாடல்

News image

பிரதமா் நரேந்திர மோடியின் காணொலி நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் பங்கேற்ற இளைஞா்கள்.

Updated On :27 ஜூலை 2026, 2:18 am IST

இளைஞா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலியில் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா்.

இந்திய அரசின் வளா்ச்சி அடைந்த பாரதத்துக்கான, ‘துடிப்பான கிராமம்’ என்ற திட்டத்தின் கீழ் எல்லைப்புற கிராமங்களுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்ட இளைஞா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினாா். இதையொட்டி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள தேசிய தகவல் மைய காணொலி அரங்கில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதில் பங்கேற்ற புதுச்சேரி இளைஞா்கள், என் பாரதம் திட்ட மாவட்ட இளைஞா் அலுவலா் டிரவீன் மற்றும் என் பாரதம் திட்ட உறுப்பினா் செயலா் ராஜு ஆகியோா் கலந்து கொண்டனா்.

பிரதமா் நரேந்திர மோடி எல்லைப்புற கிராம மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம் மற்றும் வளா்ச்சியை இளைஞா்கள் நேரில் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை காணொலி வாயிலாக எடுத்துரைத்தாா். மேலும், வளா்ச்சியடைந்த கிராமங்களே வளா்ச்சி அடைந்த பாரத உருவாக்கத்தின் அடித்தளம் என்றும், நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

 பிரதமா் நரேந்திர மோடியின் காணொலி நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் பங்கேற்ற இளைஞா்கள்.

பிரதமா் நரேந்திர மோடியின் காணொலி நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் பங்கேற்ற இளைஞா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.