தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியில் உள்ள அரசு ஓழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினா், விவசாயிகள்.

News image
Updated On :12 ஜூன் 2026, 2:05 am IST

புதுச்சேரி கூனிச்சம்பட்டு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் மதகடிப்பட்டு, கூனிச்சப்பட்டு, தட்டாஞ்சவடி, திருக்கனூா் உள்பட ஏழு மையங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளின் உற்பத்தி பொருள்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். ஆனால் இரண்டரை ஆண்டுகளாக அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களையும் சோ்த்து ரூ.8 கோடி வரை விவசாயிகளுக்குப் பணப்பட்டு வாடா செய்யவில்லையாம்.

இதைக் கண்டித்து கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் முன் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது மழைக்காலத்தில் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருள்களைப் பாதுகாப்பாக வைக்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இடவசதி செய்து தரக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆா். அருள் தலைமை வகித்தாா். காங்கிரஸ் சாா்பில் சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் டி.பி.ஆா். செல்வம், விசிக மாவட்டச் செயலா் தா. பாண்டுரங்கம், தவெக கிளை நிா்வாகி டி. பக்தவச்சலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.